இயற்கை வேளாண்மையை நோக்கி

Add whatever you want here, or More about meE...

சிகரெட்டில் வெற்று பேக் முறையைக் கொண்டு வாருங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி 30.5.2016 ஜூன் 2009லிருந்து மலேசியா சிகரெட்டு பேக்கட்டுக்களில் படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்களைப் பொறித்து வெளியிட்டது. அதிலிருந்து சுமார் 92.8 விழுக்காட்டினர் (93.2 விழுக்காடு ஆண்கள், 74.7 விழுக்காடு பெண்கள்) இந்த எச்சரிக்கை வாசகங்களை உற்று கவனித்துள்ளதாக மலேசிய அனைத்துலக புகையிலை ஆய்வகம் (GATS) அறிவித்துள்ளது. அபாய படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்கள் பலன் தரக்கூடியவை என்பதையே இது காட்டுகிறது. வேறு பல நாடுகளுள் இந்த முறையை அமலாக்கம் செய்துள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் [...]

மர அழிவைத் தடுப்போம்! மரம் நடுவதை ஊக்குவிப்போம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் புவி தின அனுசரிப்பு

பத்திரிகைச் செய்தி 22.4.2016 நம் பூமியில் ஒவ்வொரு வருடமும் 15 பில்லியன் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒரு நிமிடத்திற்கு 48 காற்பந்து விளையாட்டுத் திடலை இழப்பதற்குச் சமமான அளவாகும். இந்த மர அழிவு சூழலுக்கு இழைக்கப்படும் ஒரு பெரிய வன்முறை. மலேசியாவில் அரிய பொக்கிஷமான மரங்கள், மேம்பாடு என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன. மரங்களை வெட்டுவது, வியாபார நோக்கிலான பெரிய அளவிலான மறுநடவு, நகர்ப்புறமயமாக்கம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையே மர அழிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. இந்நிலைமையைக் [...]

மரங்களைக் காப்போம்! ஜாலான் மஸ்ஜிட் நெரிகிரியில் மரங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துங்கள்!

பத்திரிகைச் செய்தி 16.2.2016 பினாங்கு, ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 1.8 தூரத்திற்கு சாலையை விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பினாங்கு நகராண்மைக் கழகத்திடமும், பினாங்கு மாநில அரசாங்கத்திடமும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார். ஸ்காட்லாந்து சாலை, லோரோங் பாத்து லான்சாங் – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சந்திப்பு மற்றும் ஜாலான் ஆயர் ஈத்தாம் – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சந்திப்பு ஆகிய இடங்களில் 33 மரங்கள் அகற்றப்படவிருப்பதாக இருந்து, [...]

நிராகரிக்கப்பட்ட விலைக்குப் போகாத தேங்காய்கள் 2 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன சிதறும் செல்வத்தை சீரான செயல்களுக்கு செலவு செய்வோம் பி.ப.சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி 20.1.2016 தைப்பூசம் நெருங்க நெருங்க, தேங்காய்களின் விலையும் உயர்ந்துக்கொண்டே போவது அதிர்ச்சியைத் தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது. அதே நேரத்தில் உடைபடாத நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் ஒரு சில வியாபாரிகள் பக்தர்களிடம் ஏமாற்றி விற்று விடுவதாகவும் பி.ப.சங்க கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார். (தைப்பூசத்திற்குப் உடைக்கப்படும் தேங்காய்களுடன் என்.வி.சுப்பாராவ்) மொத்தமாக பைகளில் வாங்கும்பொழுது அதனுள் நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் சேர்த்து விற்றுவிடுகிறார்கள் என்று அவர் கூறினார். ஒரு பையில் 50 தேங்காய்களைக் [...]

வாழ்க்கையை சீரழிக்கும் மின்சிகரெட், சீஷா போதையில் இளைஞர்கள் : அமைச்சு இதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்

பத்திரிகைச் செய்தி 4.12.2015 மின்-சிகரெட் மற்றும் வேப்பிங்கை முற்றிலும் தடை செய்வதற்குப் பதிலாக அதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருக்கும் மலேசிய அமைச்சரவையின் முடிவு அதிர்ச்சியை அளித்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முகம்மது இத்ரிஸ் கூறினார். (Click the photo to view video) இந்நாட்டின் இளைய தலைமுறையின் எதிர்காலம் சீரிழியாமல் இருக்க வேண்டுமானால் மின்-சிகரெட் மற்றும் வேப்பிங் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்றார் அவர். இவ்விடயத்தில் அமைச்சரவையின் இந்த அலட்சியப்போக்கு இன்னும் நிறைய [...]

நம்மையும் பூமியையும் பாதுகாக்கும் பொருட்டு இறைச்சியைத் தவிருங்கள்

பத்திரிகைச் செய்தி 26.11.2015 நம்முடைய ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பயனீட்டாளர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். இறைச்சி உட்கொள்வது குறிப்பாக பதனம் செய்யப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது வயிறு-பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக புற்றுநோய் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அனைத்துலக மையம் ஒன்று கூறுகிறது. இவற்றில் உப்பு சேர்க்கப்பட்ட, புளிக்கவைக்கப்பட்ட, புகைமூட்டம் செய்யப்பட்ட ஹோட் டோக்ஸ், சோசேஜ், மாட்டிறைச்சி, [...]

பயனீட்டளார் சங்கத்தின் வெளியீடுகள்
விதைகளை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவியுங்கள்

தை ஒரு விவசாயியின் பொக்கிஷம். பல ஆயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் விதைகளைக் கண்காணித்து, தேர்வு செய்து, பாதுகாத்து, பேணி வளர்த்து வருகின்றனர். ஆனால் ஒரு நூற்றாண்டு காலமாக உலகம் முழுக்கம் விதைகளின் பல்வகைமையில் பெருத்த இறக்கம் ஏற்பட்டுள்ளது. 2010ல் மட்டும் உலகின் விதைகளின் பல்வகைமை 75% இழக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய நிர்வாகம் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டுள்ளது. வேளாண் தொழிற்துறை மற்றும் அதனை ஆதரிக்கும் கொள்கைகளும் வேளாண் பல்வகைமைக்கு பெரிய உறுத்தலாக அமைந்து வருகிறது. விவசாயத்திற்குத் தேவையான [...]

பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை தோட்டத்தில் வெளியீடு கண்டது நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு நூல்

நம்மாழ்வார் உலகம் முழுவதிலுமுள்ள, குறிப்பாக இந்தியாவின் கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் உதடுகளால் உச்சரிக்கப்படும் பெயர். இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலுள்ள இந்திய, சீன மற்றும் மலாய்க்கார விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப மாதர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஜீவன் நம்மாழ்வார். விவசாயத்தில் இயற்கைப் புரட்சியை ஏற்படுத்திக்கொடுத்த அந்த மாமனிதரை மலேசியாவிலுள்ள சீன வம்சாவளியைச் சேர்ந்த விவசாயிகள் சீ·பு (sifu) என்றே அழைக்கின்றனர். அதன் உண்மையான அர்த்தம் நம்மாழ்வார் இயற்கைவிவசாயத்தின் குரு என்பதேயாகும்.நம்மாழ்வாரின் எளிமையான அணுகுமுறை, ஆனால் [...]

ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு மண் நலம் காப்போம்

மண் என்பது எளிதில் புதுப்பிக்கப்பட முடியாதஒரு வளம் ஆகும். ஒரு மனிதன் வாழும் காலகட்டத்தில் அதனைப் புதுப்பித்துவிட முடியாது. நில அரிப்பு, மண் உவர்ப்பு, மண் இறுகிப்போதல், மண் அமிலத்தன்மைமற்றும் இரசாயன மாசுபாடு காரணமாக மண் தரம் 33% கெட்டுப்போய்விட்டதாக உணவு மற்றும்வேளாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலையைத் தருகிறது.நிலத்தைக் குறுகிய கால கட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்துவது, மோசமான வானிலை, மண் நிர்வகிப்புக்கோளாறுகள் ஆகியவற்றின் காரணமாக மண்ணின் தரம் கெட்டுப்போய்விட்டது.ஒரே வகையான பயிர்களை நடுதல்,மேம்பாட்டுத் திட்டத்திற்காககாடுகளை [...]


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME